எத்தனையோ மலர்கள் தவிர்த்து
எருக்கஞ்செடி நுனியில்
பறந்து பறந்து உட்காரும்
அந்த வண்ணத்துப்பூச்சி
நினைவூட்டுகிறது
யார் சொல்லியும் கேளாமல்
சைக்கிள் கடைக்காரரை
கட்டிக் கொண்டு
காணாமல் போன
வனிதா அக்காவை!
.
நெளிவு நெளிவான
நீண்ட கூந்தலோடு
கண்களால் பேசும்
சுந்தரி் சித்தியை
எங்கிருந்தோ
நினைவுபடுத்துகின்றன
மார்கழி மாத
வண்ணக்கோலங்கள்..
|
No comments:
Post a Comment