சங்கம் துவங்கி நவீனம் வரை
கலைந்து கிடந்த புத்தகங்களை
ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி
கால் எக்கி வாகான இடமொன்றில்
பூனை வரைந்தாள் பொம்மி
இரண்டரை வயது பூம்பாதங்கள்
வலிக்கும் போதெல்லாம்
பின்னங்கால் ஊன்றி இடுப்பில் கைவைத்து
சலித்து மிதிப்பாள் புத்தகங்களை
ஒவ்வொரு மிதியின் கொலுசொலியோடும்
புத்தகங்களிலிருந்து கேட்டன
படைப்பாளிகளின் சிரிப்பொலிகள்
சுவரிலிருந்து கேட்டன
பூனைகளின் ’மியாவ்’ ஒலிகள்
யவனிகா ஸ்ரீராம்..
ReplyDeleteஅருமை