Saturday 15 July 2017

அவரவர் வீடு..






வீட்டை விற்று
நாலு தெரு தாண்டிக்
குடிவந்தும் கூட
ஏதேனும் வேலையாய்
பழைய தெரு வழிதான்
அம்மா போகும்
அக்கா மட்டும்
’வேண்டாம்டா’ என்று
சுற்றிப் போகும்

‘நாம வச்ச முருங்கை’ என
காய்களுடன் பாட்டி பூரிக்கும்போது
முகர்ந்து பார்க்கும் அம்மாவுக்கு
வேறு முகம் வந்து
ஒட்டிக் கொள்ளும்


வருசங்கள் ஆனபின்பும்
தம்பியின் விளையாட்டும்
தோழமையும்
பழைய தெருவில்தான்

தங்கை வளர்த்த
பூனை மட்டும் வரவேயில்லை
அங்கிருந்து.

பனை மரக் காடு விட்டு
ஆழ்கடல் தாண்டிவரும்
அகதிகள் குடும்பத்தின்
கனவில் வருமோ
அவரவர் வீடும் மரமும்.

4 comments:

  1. வேல்முருகன்..

    கவிதை அழகு
    உணர்வுபூர்ணமானவை

    ReplyDelete
  2. ரதி தேவி..

    செம செம நியாபகங்கள் குடியேறும் பழையத்தெருவில்...

    ReplyDelete
  3. தினம் தினம் வந்து கண்களை பனிக்க செய்கின்றன...

    ReplyDelete
  4. தினம் தினம் வந்து கண்களை பனிக்க செய்கின்றன...

    ReplyDelete