Wednesday, 18 April 2018

சையத் உசேன் பாஷா: மரணத்தில் மிதக்கும் சொற்கள்: ஜே.ஷாஜஹான்... (உயிர் எழுத்து ஏப்ரல் இதழ் 2018)எழுத்தாளர் அர்ஷியா எனும் சையத் உசேன் பாஷா அவர்கள் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. சிக்கலற்ற பழக்க வழக்கங்கள், எளிய உணவு முறை கொண்டிருந்த ஒரு இலக்கியவாதியின் திடீர் இழப்பு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.வாழும்போதே அங்கீகரிக்கப்படுகிற இலக்கியவாதிகள் மிககுறைந்த தமிழ் சமூகத்தில் அர்ஷியா தனது முதல் நாவலானஏழரைப்பங்காளி வகையறாவுக்காக தமிழக அரசின் விருதினைப்பெற்றும், “திப்புசுல்த்தான்எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக .மு...வின் மொழிபெயர்ப்பாளர் விருதினைப் பெற்றும் பாராட்டுப்பெற்றவர். அவரது ஏழரைப்பங்காளி வகையறா நாவல் ஒரு இனவரைவியல் படைப்பு என அறியப்பட்டது. தமிழிலக்கியத்தில் அதிகம் பதிவாகாத இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அதிலும் அவர்களின் ஒரு பகுதியினரேகூட அதிகம் அறிந்திராத உருது முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை, பண்பாட்டினை பதிவு செய்த வகையில் அர்ஷியா ஒரு முன்னோடி எனலாம். தான் சார்ந்த சமூகத்தைப் பற்றி எழுதும்பொழுது படைப்பாளிக்கு தன்னையறியாமல் தற்பெருமை பீறிடக் கூடும். ஆனால் விருப்புவெறுப்பின்றி தன் சமூக வாழ்வியலை அழகியலுடன் நாவலாக்கியவர் அர்ஷியா. இஸ்லாமியர்களின் வாழ்வியலை எழுதினாரேயன்றி இஸ்லாமியராய் மட்டும் இயங்கிய படைப்பாளியல்ல அவர்.

Friday, 13 April 2018

நிறைத்தெப்பம் ( உயிர் எழுத்து பிப்ரவரி 2018)


உன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறேன்என்று ஞானத்தின் குறுஞ்செய்தி வந்ததும் கார்த்திக்கு படபடப்பு வந்தது. ஞானத்தைப் பார்த்துவிட்டால் செல்வி இன்று முழுவதும் முகத்தைத் திருப்பிக் கொள்வாள். கடை  வீதியிலிருந்து உடனடியாக பைக்கை வீட்டிற்கு திருப்பினான். ஞாயிற்றுக்கிழமையாக இல்லாவிட்டால் அவனை அலுவலகத்திற்கு வரச்சொல்லிவிடலாம். 

               ஞானம் என்கிற ஞானசேகரன் நண்பன். வாலிப வயதில் இலக்கியம், கவிதை, புரட்சி என கூட்டங்களுக்குச் செல்வதும், புத்தகங்கள் வாசிப்பதும் ஏதாவது எழுவதுமாய் இருந்த காலத்தில் கிடைத்த நட்பு. வேலை, திருமணம் என ஒவ்வொன்றாய் வர அதே வரிசையில் மேற்குறித்த ஒவ்வொன்றும் விலகிப்போய்விட்டன. நண்பர்கள் எல்லோரும் ஆடி அடங்கியும் ஞானம் மட்டும் இலக்கியப்பித்து தெளியாமல் ஊர்சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாண்டுகாலம் சினிமாப்பித்துப்பிடித்து ஆடினான். வார இதழ் ஒன்றில் நிறுபராகப் பணியாற்றி போலீஸிடம் அடிவாங்கினான்

 லக்கிய ஆர்வமுள்ள நண்பர்களைத் தேடி வந்து மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருப்பான். எப்போது படிப்பான் எப்போது எழுதுவான் எனத்தெரியாது, போனால் போன இடம், வந்தால் வந்த இடம். எந்த  முன் முடிவும் இல்லாமல் எப்படி ஒருவனால் வாழ முடிகிறது என்பது ஆச்சிரியமே. ஒரு துறவி போன்ற சுதந்திரவாழ்க்கை வாய்க்க அவன் திருமண பந்தத்தில் மாட்டிக் கொள்ளாத கொடுப்பினைதான் காரணம்.

Saturday, 19 August 2017

தொலைந்த வண்ணத்துப்பூச்சிகள்...
எத்தனையோ மலர்கள் தவிர்த்து
எருக்கஞ்செடி நுனியில்
பறந்து பறந்து உட்காரும்
அந்த வண்ணத்துப்பூச்சி
நினைவூட்டுகிறது
யார் சொல்லியும் கேளாமல்
சைக்கிள் கடைக்காரரை
கட்டிக் கொண்டு
காணாமல் போன
வனிதா அக்காவை!

Thursday, 27 July 2017

அழகிகளும் பேரழிகளும்…


இயல்பாகவே
லட்சணமாயிருக்கிறார்கள்
அழகிகள்.
லட்சணமாயிருந்தும்

Wednesday, 26 July 2017

வலியின் மொழி..எந்த மொழியும்
போதவில்லை
வார்த்தைகள் வேண்டும்
வலியை மொழிபெயர்க்க!