Wednesday 24 February 2016

அன்பின் ரகசியம்..



காரியம் சாதிப்பதற்கான
சரிக்கட்டல் என்றார்
மேலதிகாரி..

வேலை வாங்கிட
பசப்புவதாகச் சொன்னான்
பணியாளன்..

காமம் தீர்க்க
சுற்றி வளைப்பதாய்
காதலி சொன்னாள்..



முதுமையில் தயவு வேண்டி
நடக்கும் நாடகமென்றன
பிள்ளைகள்..

எல்லோரையும்
நனைத்துக் கழுவும்
இந்த மழை அறிந்துள்ள
அன்பின் ரகசியம்
நாமறிவதெப்போது?

No comments:

Post a Comment