Wednesday 24 February 2016

முள்ளிவாய்க்கால்


பதுங்கு குழிகளின் உள்ளிருந்து
பதறிக் கதறிய பிஞ்சுகளில்
என் குழ்ந்தைகளின் சாயலில் எனக்கும்

ரத்தம் சொட்டக்கதறி  ஓடும் மனிதர்களில்
என் சாயலில் என் பிள்ளைகளுக்கும்
யாரோ தெரிந்து கொண்டேயிருக்கிறார்கள்


கவனமாய் பாருங்கள்
உங்கள் சாயலிலும்
யாரேனும் இருக்கலாம்
கதறிக்கொண்டோ
பதறிக்கொண்டோ!

No comments:

Post a Comment